தாதி வடிவத்தில் காதலி: மட்டக்களப்பு வைத்தியசாலையில் நூதன திருட்டு!

Date:

தாதி வேடமிட்டு வைத்தியசாலைக்குள் நுழைந்து பெண் நோயாளியின் தங்க நகைகளை சாதுரியமாக திருடிச்சென்ற சம்பவமொன்று களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வைத்தியசாலையொன்றில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகத்திற்கிடமான ஒருவரை வைத்தியசாலை நிருவாகதத்தினர் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனளர்.

வயிற்றுவலி காரணமாக நோயாளியொருவர் தனது உறவினரின் முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருக்கும் போது அந்த முச்சக்கர வண்டியில் தாதி உடையணிந்த பெண்ணொருவரும் இருந்துள்ளார். இந் நிலையில் தாதியர் உடையணிந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும் தனது வீட்டில் குறித்த பெண் இருப்பதாகவும் முச்சக்கர வண்டிய உரிமையாளர் நோயாளிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதே வேளை தான் நோயாளி செல்லும் வைத்தியசாலையிலையே தாதியராக தான் கடமையாற்றுவதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் வயிற்றுவலி காரணமாக வந்த நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டியிருந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் தாதியர் உடையணிந்த பெண் நோயாளிக்கு உதவிபுரிவதாக தெரிவித்து நோயாளியுடன் வைத்திய விடுதிக்குள் சென்றுள்ளார். விடுதிக்குள் அனுதிக்கப்பட்டதும் தாதியர் ஆபரணங்களைக் கழற்றுமாறு நோயாளியிடம் கூறியியுள்ளனர். நோயாளி தனது நகைகளை கழற்றி உறவினரின் மனைவி என்றகோதவிலும் குறித்த வைத்தியசாலையில் கடைமையாற்றும் தாதியர் என்ற கோதாவிலும் நம்பிக்கை அடிப்படையில் தனது உறவினரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்து குறித்த தாதிய பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

குறித்த நோயாளி மறுநாள் உறவினர்களிடம் நகைகள் தொடர்பாக வினவியபோது குறித்த நகை உரியவர்களிடம் கிடைக்கவில்லை என தெரிய வந்ததையடுத்து. தனது மனைவியென அறிமுகப்படுத்திய முச்சக்கரவண்டி சாரதியிடம் விடயம் தெரிவித்துள்ளார் நோயாளி. இதனையடுத்து குறித்த முச்சக்கர வண்டி உரிமையாளர் வைத்தியசாiலைக்கு குறித்த தாதிய பெண்ணை தேடிவேளை குறித்த பெண் அங்கு தாதிய உத்தியோகத்தரகாக கடமையாற்றுபவரல்ல என்ற உண்மை தெரியவந்தது. இதனையடுத்து வைத்தியசாலை நிருவாகத்தினர் முச்சக்கரவண்டி உரிமையாளரை குறித்த தாதிய பெண்ணை தெரிந்தவர் என்ற அடிப்படையில் அவரை பிடித்து களுவாஞ்சிகுடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-பளுகாமம் நிருபர்-

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபருக்கு திடீர் ஆதரவு: சந்தேகத்தை கிளப்பும் பின்னணி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளரான,...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்