சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(06) கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடகர் சங்கீதன் சாவகச்சேரி பொலீஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் தனது ரிக்ரொப் பக்கத்தில் விடுதலைப் புலிகளின் சித்தாந்தங்களை மீளுருவாக்கம் செய்யும்விதமாக பாடி வந்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த் இச் சம்பவத்திற்கு
எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.




