இலங்கையில் போரினால் உயிரிழந்த பொதுமக்களின் நினைவுகூறுதலில் ஒரு சமச்சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என எஸ்.ஜே.பி இளைஞர் அமைப்பாளர் சமித் விஜேசுந்தர அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அவர் எச்சரித்துள்ளார்.
X தளத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், மோதலின் போது உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் உயிர்களை நினைவுகூருவதும், உண்மையான தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதும் முக்கியம் என்று விஜேசுந்தர கூறியுள்ளார். இருப்பினும், அத்தகைய நினைவுகூர்தல், விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்துவதற்கான ஒரு “பாதுகாப்பு திரையாக அமையக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறுவர் படைவீரர்களைச் சேர்த்தல், தற்கொலைத் தாக்குதல்கள், மற்றும் சமாதானத்திற்காகப் பரிந்துரைத்த மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நடவடிக்கைகளை அவர் வன்மையாகக் கண்டித்தார்.
தமிழ் சமூகத்திற்கு உண்மையான குணமடைதலும் நீதியும் கிடைக்க, விடுதலைப் புலிகளின் வன்முறையால் ஏற்பட்ட “ஆழ்ந்த வடுக்களை” ஏற்றுக்கொள்வதும், ஆயுத மோதலை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக சமாதானத்தின் அடிப்படையில் ஒன்றுபட்ட எதிர்காலத்திற்கான கூட்டு உறுதிப்பாடும் அவசியம் என்று விஜேசுந்தர மேலும் கூறினார்.



