விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

Date:

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது.

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது.

இதனையடுத்து இன்று ஆலோசனை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் தவெகவுக்கு ஆதரவை அறிவித்தது.

இந்த சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக தவெக ஆட்சியமைக்க 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

ஆட்சியமைக்க தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை தவெக தொட்டுள்ளதால், விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறுவனிடம் கார் ஓட்டக்கொடுத்த தந்தை மீதும் வழக்கு

புதன்கிழமை (13) அன்று, 15 வயது பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற...

அமெரிக்கா மீது நம்பிக்கையில்லை: ஈரான் வெளிவிவகார அமைச்சர்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தெஹ்ரானுக்கு...

ஓகஸ்ட் மாதம் வரையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!

ஓகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்