கொத்துப் போட பிந்தியதால் உணவக ஊழியர் மீது தாக்குதல்!

Date:

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம் ஒன்றில் கொத்துரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மீது மதுபோதையில் சென்ற கண்ணா தலைமையிலான இளைஞர் குழுவினர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் நடாத்திய குழுவினர் தப்பி ஓடிய சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசர் தெரிவித்தனர்.

குறித்த உணவகத்தில் சம்பவதினமான நேற்று இரவு 12.00 மணிக்கு சென்ற குழுவினர் கொத்து ரொட்டி சாப்பிடுவதற்கு ஓடார் செய்துள்ள நிலையில் அதனை தயாரித்து கொடுக்க நேரம் பிந்தி வழங்கியதாக தெரிவித்து கொத்து ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டவர் மீது மோட்டர் சைக்கிள் தலைக்கவசத்தல் அவரது தலையில் தாக்குதல் நடாத்திவிட்டு அந்த குழுவினர் தப்பி ஓடியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவரை மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்