யாழில் சைவசித்தாந்த பட்டப்படிப்புகளை ஆரம்பிக்கும் தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

Date:

சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இன்று பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

சைவ பரிபாலன சபையை மையமாகக் கொண்டு தர்மபுர ஆதின அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டப் படிப்புகளை ஆரம்பித்து வைப்பதற்கானதுதொடர்பான ஊடக சந்திப்பு மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகம் அரண்மனையில் இடம்பெற்றது.

இதன்போது கலாநிதி ஆறு திருமுருகன், இலங்கை இந்து மத குரு பீடத்தின் தலைவர் சிவ ஸ்ரீ வைத்தியஸ்வர குருக்கள் மற்றும் நல்லை ஆதீனத்தினர் உள்ளட்ட சுவாமிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது திருமுறைகள் உள்ளடங்கிய நூல்களும் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது நல்லை ஆதீனம் தொடர்பான கருத்துக்களையும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...

நெடுந்தீவு கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்பு!

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்