சட்டவிரோதமாக மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கிச்சூடு!

Date:

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரங்களை விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்திய போது அவர்கள் சமிக்ஞையை மீறி சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்

சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திரங்களில் மணல் ஏற்றி செல்வது தொடர்பான இரகசிய தகவலுக்கு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்தமைக்கு அமைவாகவே குறித்த வாகனத்தை நேற்று (26) விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களின் சமிக்ஞையை மீறி குறித்த உழவு இயற்திரங்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது

இந்த சம்பவத்தின் விசேட அதிரடிப்படையினர் ஒருவர் உழவு இயந்திரத்தில் மோதுண்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரங்களில் ஒரு சாரதி தப்பி ஓடி உள்ள நிலையில் மற்றைய உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

-மு.தமிழ்ச்செல்வன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள்...

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்