அல்லைப்பிட்டியில் பொலிசாரை மோத முற்பட்ட வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: 17 வயதானவர் உயிரிழப்பு!

Date:

வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் கடமையில் இருந்த பொலிசாரின் உத்தரவை மீறியும், அவர்களை மோதிவிட்டும் தப்பிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்கார்.

இன்று (10) அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேலணை – அல்லைப்பிட்டிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஹயஸ் வாகனம் ஒன்று, இன்று அதிகாலை 1.15 மணியளவில் சென்றுள்ளது.
அந்த வாகனத்தை அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டுள்கனர்.

ஆனால் பொலிசாரின் உத்தரவை மீறி வாகனம் அதிவோகமாக சென்றுள்ளது. பின்னர், பொலிசாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்லும் நோக்கில் அதிவேகமாக திரும்பி வந்ததை அவதானித்த பொலிசார் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபரை பொலிசார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்த நிலையில் ஏனைய இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்