இன்றைய வானிலை

Date:

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்