கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ.துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள்இடைநிறுத்தம்!

Date:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலைத்தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்தமாக பீடமட்டத்திலும், பல்கலைக் கழக மட்டத்திலும் கல்வி, விளையாட்டு, கலை கலாசாரம் உட்பட சகலதுறைகளிலும் சிறந்த மாணவன் ஒருவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுவது வழமையாகும்.

இம்முறை கலைப் பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்த மாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம், பல்கலைக் கழக மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்தமாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ஆகிய விருதுகளுக்காககிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் ஊடகத் துறையைச் சேர்ந்த மாணவன்ஒருவருக்கு சிறந்த மாணவனுக்கான பல்கலைக்கழக மட்ட விருது வழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பின், மெய்யியல் துறை மாணவன் ஒருவரிடம் இருந்து துணைவேந்தருக்குக் கிடைத்த மேன்முறையீட்டின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும் விசேட மூதவைக் கூட்டம் கூட்டப்பட்டு மெய்யியல் துறை மாணவன் விருதுக்கு உரியவராக அறிவிக்கப்பட்டார்.

எனினும், மெய்யியல் துறை மாணவனுக்கு எதிராக மாணவர் தரப்பில் இருந்து மேன்முறையீடுகளும், ஆதாரங்களும், புதிய சாட்சியங்களும் கிடைத்த வண்ணம் இருப்பதனால், விருதுக்குரியவரைத் தெரிவு செய்வதற்குக் கால அவகாசம் போதாமையனால் விருது வழங்கல் இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய விசாரணைகள் இடம்பெற்று பிறிதொரு விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று மேலும்தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் சிறையில் அடைக்கப்பட்டனர்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று, முன்னரே உளவுத்துறை எச்சரிக்கைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்