இயற்கை அனர்த்த உயிரிழப்பு 200ஐ கடந்தது: 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு!

Date:

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் 212 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அனர்த்தங்களில் சிக்கி 218 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2,73,606 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,98,918 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் 1,275 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 51,228 குடும்பங்களைச் சேர்ந்த 1,80,499 நபர்கள் தற்போது பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறிக்கக்கூடாது: கண்டிப்பான உத்தரவு!

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டியிருக்கும் போது, ​​காவல்துறை உத்தியோகத்தர்கள்...

ஈரானின் அணுசக்தித் திட்டம் அல்ல, எண்ணெய் விலைகளை குறைப்பதே போரில் முதன்மையான முன்னுரிமை: அமெரிக்கா

ஈரான் போரில் அமெரிக்காவின் தற்போதைய முதன்மை முன்னுரிமை அதன் அணுசக்தித் திட்டம்...

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்