25.4 C
Jaffna
January 6, 2025
Pagetamil
சினிமா

மாநாடு முதல் சிங்கிள் ரம்ஜானுக்கு வெளியாகாது!

இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானதால் மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிடப்படாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் முதல் சிங்கிள் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். இந்நிலையில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது மாநாடு படத்தின் first single நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொரு தேதியில் first’sigle வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம்.

கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே என்று தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் அம்மா மணிமேகலை கங்கை அமரன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 69. வெங்கட் பிரபுவும் சரி, அவரின் தம்பி பிரேம்ஜி அமரனும் சரி அம்மா செல்லங்கள். இந்நிலையில் தாயை இழந்து வாடும் அவர்களுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

சிம்பு வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருந்ததாவது,

அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை…

எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள்.

கடந்த இரண்டு வருடமாக, இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும்..இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன்.

அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு.

அப்பாவிற்கும், குடும்பத்திற்கும், உங்களனைவருடனும், இழப்பையும்…வேதனையையும் பகிர்ந்துகொள்கிறேன்.அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கண்ணீருடன் சிலம்பரசன் என தெரிவித்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

Leave a Comment