கலா ஓயா பாலத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது: ஜனாதிபதி கண்காணிப்பு!

Date:

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

அந்த பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.

பேருந்தில் இருந்தவர்கள் அங்குள்ள வீடொன்றின் கூரையின் மீது தங்கியுள்ளனர்.

இந்த மக்களை மீட்கும் நடவடிக்கையை கடற்படை முன்னெடுத்திருந்தது.

நேற்று (28) இரவு நீரின் வேகம் காரணமாக அவர்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.

கடற்படையின் செயற்பாட்டுக் கப்பல் தொகுதி, இலங்கை கடற்படை நீச்சல் பிரிவு, விசேட படகுப் படைப் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மேலதிகப் படையினரும் இந்த மீட்புப் பணிகளில் இணைந்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையின் நேரடிக் காட்சிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (29) அதிகாலை கண்காணித்தார்.

spot_imgspot_img

More like this
Related

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு...

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...

ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு!

போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்