இரணைமடு குளத்தின் நீர் 40 அடியை எட்டியது!

Date:

கிளநொச்சி, இரணைமடு குளத்தின் நீர்கொள்ளளவு 40 அடியை எட்டியுள்ளது.

36 அடியை எட்டியதும் அதன் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டிருந்தது. எனினும், நீர் வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று அதன் வால்கட்டு பகுதி வெட்டப்பட்டு, மேலதிக நீர் வெளியேற்றப்பட்ட போதும், அதிக நீர் வரத்து இருப்பதால் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது 40 அடியை எட்டியுள்ளது.

இரணைமடு குளத்திலிருந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதால் வட்டக்கச்சி, மயவனூர், கண்டாவளை பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலதிக நீர் வெளியேற்றப்படுவதால் பரந்தன்- முல்லைத்தீவு வீதி வெள்ளத்தில் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி தொண்டமான் நகர் வீதியும் வெள்ளத்தில் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா...

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும், ஓமனுமே தீர்மானிக்க வேண்டும்!

ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்காலத்தை ஈரானும் ஓமானும்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அந்த...

ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் படுகாயம்

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்