போதைப்பொருளுடன் சிக்கிய யாழ் மாநகரசபை உறுப்பினரின் மகன்

Date:

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் கைதான இருவரில் ஒருவர் யாழ் மாநகர சபையின் உறுப்பினர் ஒருவரது மகன் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் 20g ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யபட்டுள்ளனர்.

சுமார் 25 மற்றும் 23 வயதை சேந்த குறித்த நபர்கள் கைதான சமயம் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிக்கவும் முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் குறித்த இருவருள் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடமிருந்து அபாயகரமான வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றையதினம் கைதான இருவருடன் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் கடந்த சில தினங்களுக்குள் கைதாகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்