அர்ச்சுனா பிணையில் விடுதலை

Date:

கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்தார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு இடையே அங்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர், கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக வாகனத்தை நிறுத்தி சென்றிருந்தார்.

போக்குவரத்து விதியை மீறி அவர் வாகனத்தை நிறுத்தி சென்றதாக தெரிவித்த கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவரை திட்டியிருந்தார்.

அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்