பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளரின் தான்தோன்றித்தனம்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Date:

பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளரின் அடாவடியான நடவடிக்கைகக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (29) சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

பருத்தித்தறை பிரதேசசபை தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.

கடந்ம கூட்டத்தின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், தவிசாளரிடம் கேள்வியெழுப்பியிருந்தார். தவிசாளர் தனது சமூக ஊடக பதிவுகளில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தவிசாளர் என பதிவிட்டு வருகிறார், அவர் பருத்தித்துறை பிரதேசசபையின் தவிசாளர் என எதிர்க்கட்சி உறுப்பினர் கேட்டிருந்தார். அப்போது, தவிசாளர் எகத்தாளமாக- நான் தவிசாளராக இருந்தாலும், நான் தமிழரசு கட்சி உறுப்பினர். இது எமது ஆளுகையிலுள்ள சபை. எமது விருப்பப்படி பதிவிடுவோம் என தெரிவித்திருந்தார்.

இது கடந்த கூட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை.

இன்றைய கூட்டத்தின்போது, உறுப்பினர் ஒருவர் இதை கேள்வியெழுப்பியிருந்தார். தவிசாளர் பேசும் போது யோசித்து கதைக்க வேண்டும். அவர் தான்தோன்றித்தனமாக கதைத்து விட்டு, அவற்றை கூட்ட அறிக்கைகளிலிருந்து அகற்ற முடியாது என தெரிவித்திருந்தார்.

இதற்கு தவிசாளர், அது எனது அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கினேன் என எகத்தாளமாக பேசினார்.

அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வியெழுப்பிய விவகாரத்தையும் இன்றைய கூட்ட அறிக்கையில் சேர்க்க வேண்டாம் என பிரதேசசபை உத்தியோகத்தரிடம் தெரிவித்தார். அந்த உத்தியோகத்தரும் ஆமோதித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10 பேர் வெளிநடப்பு செய்தனர். எஞ்சிய 9 பேருடன் சபை அமர்வு நடைபெற்றது.

பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ள நிலையில், அவற்றை முறைப்படி எதிர்கொள்ள முடியாத தவிசாளர், தான்தோன்றித்தனமாக நடந்து தமது குரலை அடக்க முயல்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

தற்போதைய தவிசாளர் வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர். அவரை பருத்தித்துறையிலுள்ள அலுவலகத்துக்கு ஏற்றிவர உத்தியோகபூர்வ வாகனம் காலையில் சென்று வருகிறது. மாலையில் அவரை வீட்டில் இறக்கிவிட்டு வருகிறது. இதற்காக தினமும் 150 கிலோமீற்றர்கள் வாகனம் பயணிக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். தவிசாளரின் வீட்டுக்கு அண்மையில் பருத்தித்துறை பிரதேசசபை உப அலுவலகம் அமைந்துள்ளது. இரவில் தவிசாளரை வீட்டில் இறக்கிய பின்னர், வாகனம் உப அலுவலகத்தில் தரித்து நின்று, காலையில் ஏற்றி வந்தால் பிரதேசசபை வீண்விரயம் குறையும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

உள்ளூராட்சி தவிசாளர்கள் அண்மையில் தெரிவாகுவதற்கு முன்னர், பிரதேசசபை செயலாளர்களே மக்கள் பிரச்சினைகளை கையாண்டனர். அப்போது செயலாளரிற்கு மாதாந்தம் ரூ.30000 இற்கு உட்பட்ட பணமே செலவாகியுள்ளது. ஆனால் தற்போது பிரதேசசபை தவிசாளரின் வீட்டு பயணம் உட்பட மாதாந்தம் ரூ.125,000 வரை செலவாகி வருகிறது.

அதிகார பரவலாக்கத்திற்கு எதிரானவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக நிதி வீண்விரயமே அமைந்துள்ளது. அதிகார பரவலாக்கத்தின் அங்கமான உள்ளூராட்சிசபைகளின் தவிசாளர்களின் இந்தவிதமான வீண்விரயமே அதிகார பரவலாக்கத்திற்கு எதிரான தென்னிலங்கை கடும்போக்காளர்களின் வாய்க்கு அவலாக அமைந்து விடுவது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்