மகப்பேற்று கிளினிக்கிற்கு வந்த இளம்பெண்ணின் உள்ளாடைக்குள்ளிருந்த போதைப்பொருள்

Date:

மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த தம்பதியினர் நேற்று (26) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஈஸி காஷ் முறை மூலம் பணம் பெற்று, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்தபோது இத்தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

நாவலப்பிட்டியில் உள்ள தொலஸ்பாகை வீதியில் அமைந்துள்ள பழைய ரயில்வே உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் பொட்டலமிடப்பட்ட ஐஸ் பெக்கெட்டுகளை இவர்கள் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்களைச் சோதனை செய்தபோது, 52 ஐஸ் பொட்டலங்கள் (35 கிராம்) கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், பல பொட்டலங்கள் சந்தேக நபரான பெண்ணின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

23 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்கள், கம்பளை. கிரபன பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

‘டுபாய் தாரு’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கி, ஈஸி காஷ் முறையைப் பயன்படுத்தி விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்