‘அரசியல்குழு தீர்மானத்தின்படியே சீ.வீ.கே சென்றார்; சிறிதர் தியேட்டருக்கு செல்லாம் விட்டிருக்கலாம்’: எம்.ஏ.சுமந்திரன் சொல்லும் விளக்கம்!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு தீர்மானத்தின்படியே, சிறிதர் தியேட்டருக்கு சீ.வீ.கே.சிவஞானம் சென்று ஆதரவு கோரியிருந்தார். சிறிதர் தியேட்டரின் அடையாளம் கருதி, அங்கு செல்வது குறித்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறோம். எனினும், எங்கு சந்தித்தது என்பது விடயமல்ல, என்ன விடயம் பேசப்பட்டது என்பதே முக்கியம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

“இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக ஆசனங்களை பெற்ற இடங்களில் ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும். ஏனைய கட்சிகள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவளிக்கும். இதை அனைத்து கட்சிகளிற்கும் தெரியப்படுத்துவது என்பது அரசியல்குழுவின் தீர்மானம். இந்த தீர்மானத்தை தெரிவிக்கவே சிவஞானம் சிறிதரன் தியேட்டருக்கு சென்றார்.

அவர் சிறிதர் தியேட்டர் சென்றது விமர்சனமானதையடுத்து, அவரிடம் பேசினேன். 20 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே அங்கிருந்ததாகவும், இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக ஆசனங்களை பெற்ற இடங்களில் ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும். ஏனைய கட்சிகள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவளிக்கும் என்ற அரசியல்குழுவின் தீர்மானத்தையே அங்கு தெரிவித்ததாகவும் கூறினார்.

நாங்கம் ஆதரவு கேட்டதால், அவர்களின் இடத்திற்கே சென்று சந்தப்பதே பொருத்தமானது என்பதே அவரது நிலைப்பாடு.

பல இடங்களுக்கும் அவர் சென்றுள்ளார். ஒரு தடவை மன்னாருக்கு சென்று செல்வம் அடைக்கலநாதனை சந்தித்தார்.

சிறிதர் தியேட்டர் பலருக்கு ஒரு அடையாளம். இதனால் விசனம் ஏற்பட்டதை புரிந்து கொள்கிறோம். பொது இடத்திலோ, எமது அலுவலகத்திலோ சந்தித்திருக்கலாம். ஆனால், விடயம் எங்கு சந்தித்தது என்பதல்ல, என்ன பேசினோம் என்பதே.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரும் சந்திக்கவிருந்தனர். இதை இரகசியமாக செய்ய முயன்றனர். விடயம் வெளியானதும் சந்திப்பை தவிர்த்து விட்டனர். நாம் பகிரங்கமாக செய்தோம் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்