தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Date:

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவித்தல் வருமாறு-

2025 மே 2ஆம் தேதி காலை 8.00 மணி முதல் மே 3 ஆம் தேதி காலை 8.00 மணி வரை, நாம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றோம்.

தொழிற்சங்கப் போராட்டத்திற்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் , அவசர அவசரமாக வட மாகாண சுகாதார சேவைகள் செயலாளர் பணிமனையினால் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலின் இறுதியில் அடையப்பட்ட முடிவுகளின் பிரகாரம் , வைத்தியசாலை நிர்வாகியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கான ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிப்பதற்குரிய உத்தியோகபூர்வ கடிதம் மாகாண சுகாதார சேவைகள் செயலாளரினால் வழங்கப்படுவதாக இருந்தபோதிலும்,
உத்தியோகபூர்வக் கடிதத்தில் தீர்க்கமான விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும் இந்த வேலைநிறுத்தத்தின் மூலம், தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், மற்றும் அக் குறைபாடுகளால் மருத்துவ சேவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பற்ற பணிபுரியும் சூழ்நிலை ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த முடிந்துள்ளது.

இது ஒரு நாள் வேலைநிறுத்தம் என்பதால், 2025 மே 3ஆம் தேதி காலை 8.00 மணி அளவில் எங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த உள்ளோம். எனினும், எங்கள் போராட்டக் கோரிக்கைகளில் உறுதியாக இருந்து, உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்போம்.

எங்கள் சக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் எம்மீது காட்டும் பேராதரவு க்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்- என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்