நானியின் ‘ஹிட் 3’ முதல் நாளிலேயே வசூல் வேட்டை!

Date:

நானியின் ‘ஹிட் 3’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘கோர்ட்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நானி தயாரித்து நடித்துள்ள படம் ‘ஹிட் 3’. மே 1ஆம் திகதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசூலால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்தடுத்த மாதங்களில் பெரும் வசூல் படைக்கும் இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார் நானி.

சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹிட் 3’. முதல் இரண்டு பாகமுமே பெரும் வெற்றியடைந்து இருந்ததால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும், அனைத்து மொழிகளிலும் விளம்பரப்படுத்தினார் நானி. இது அவருக்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது.

நானியின் திரையுலக வாழ்க்கையில் ‘ஹிட் 3’ படத்தின் முதல் நாள் வசூல் அதிகம் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். மேலும், தொடர்ச்சியாக தனது அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறார் நானி. இப்படத்துக்குப் பிறகு ‘தி பாரடைஸ்’ படத்தின் நடிக்கவுள்ளார். அதற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்