வடமராட்சியில் ஜேவிபிக்கு பல்டியடித்த குழு அச்சுறுத்தல்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!

Date:

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமது அணியை தேசிய மக்கள் சக்தியின் குழுவினர் மிரட்டியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அல்வாய் பிரதேசத்தை சேர்ந்த வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட குழுவினருமே தமது வாகனத்தை இடைமறித்து, அச்சுறுத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி என்ற ஜேவிபிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது அரசியல் ரீதியாக தவறான விளைவுகளை ஏற்படுத்தும், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே தமிழ் மக்கள் சார்பில் பேச முடியவில்லையென்ற போது, உள்ளூராட்சி உறுப்பினர்கள் வாய்திறக்கவே அனுமதிக்கப்படாது என்ற யதார்த்தத்தை தமிழ் மக்கள் உணர தொடங்கியுள்ள நிலையில், ஜேவிபி இந்த அடாவடி வழிமுறைகளை கையிலெடுத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை, இந்த வட்டாரத்தில் போட்டியிடும் தவநேசன் என்பவர் முன்னர் தமிழ் தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்தவர். பின்னர் சுயேச்சைக்குழுவாகி தற்போது ஜேவிபிக்கு பல்டியடித்துள்ளார். கடந்த 3 தேர்தல்களில் 3 வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுகிறார்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்