தளபதி 65 இல் வில்லனாகும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்; உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

Date:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் வசூலில் ஓரளவு பரவால்லை. தற்போது விஜய் 65 படத்தை தொடர்ந்து அடுத்த படமான விஜய் 66 படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் மீண்டும் இயக்கபோவதாக தெரிகிறது.

சரி தளபதி 66 படத்தை விட்டுவிட்டு தளபதி 65 படத்திற்கான தகவலை சொல்றோம். ஜார்ஜியா சென்று பத்து நாட்களுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக “அப்புறம் பார்த்துக்கலாம் பாஸ்” என்று விஜய் செல்லமாக உத்தரவு போட்டுவிட்டார். தற்போது சென்னை திரும்பியுள்ள விஜய், வீட்டில் தனது மகன் மற்றும் மகளுடன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறார்.

thalapathy 65: Vijay தளபதி 65 படத்தை இயக்கப் போவது இவரா?: அடேங்கப்பா, இது  நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே - sudha kongara to direct thalapathy 65? | Samayam  Tamil

இப்படி குடும்பத்தோடு நேரம் செலவிடும் விஜய்க்கு, ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மவுசு அதிகம். ஆனால் பேமிலி ஆடியன்ஸ்க்கு அறவே பிடிக்காத செல்வராகவனும் விஜயும் கூட்டணி அமைத்தால்? …. பதற வேண்டாம், விஜய்யின் 65வது படத்தை செல்வராகவன் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

Keerthi Suresh Wishes for Sevaraghavan Birthday செல்வராகவன்

இதைப்பற்றி அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வரவில்லை. இருந்தாலும் இந்த தகவலை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் தான் இருக்கிறார்கள். இப்போது செல்வராகவன் சாணிகாயிதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்