‘விஸ்வாசம்’ வசூல் சாதனையை முறியடித்த ‘குட் பேட் அக்லி’

Date:

தமிழகத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது, அவரது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.

ஏப்ரல் 10ஆம் திகதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும், தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்ததால், தமிழக வசூலில் பெரும் சாதனை படைக்கும் என கருதப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக அனைத்து சாதனைகளையும் கடந்து, இப்போது தமிழகத்தில் அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

தமிழகத்தில் அஜித் படங்களில் ‘விஸ்வாசம்’ படம் தான் வசூலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது. தற்போது அதன் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ‘குட் பேட் அக்லி’ படத்தின் வசூல். இதன் மொத்த வசூல் தமிழகத்தில் ரூ.140 கோடியை கடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் பங்குத் தொகை ரூ.65 கோடியை கடந்துவிட்டது. இந்த வசூல் வெற்றியால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், சிம்ரன், த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றி வெற்றி கண்டுள்ளார் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்