காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி மாறி மாறி தாலியை கட்டிக் கொண்ட சம்பவம்; ஆண் பெண் சமம் என்பதை நிரூபித்த தம்பதி!

Date:

மும்பையில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி மாறி மாறி தாலியை கட்டிக் கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மும்பையை சேர்ந்த தனுஜா பாட்டீல், ஷார்துல் கதம் ஆகியோர் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட போது ஷார்துல் கதம் தனது காதலியிடம் ஆணும் பெண்ணும் சமம் என்பதை குறிக்கும் வகையில் திருமணம் இருக்க வேண்டும் என கூறினார்.

அதற்கு காதலியும் சம்மதிக்க, இருவரும் தாலியை மாறி மாறி கட்டிக்கொள்ள முடிவெடுத்தனர். இவர்களின் முடிவுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், ஜோடிகள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை.

பின்னர் இருவரும் தாலியை மாறி மாறி கட்டிக்கொண்டனர். சாகும் வரை இருவரது கழுத்தில் இந்த தாலி இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்தனர். இந்த வினோத திருமணத்தின் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாறி மாறி தாலியை கட்டிக் கொண்ட தம்பதிகள்! அதிர்ந்த உறவினர்கள் - கனடாமிரர்

 

Views: – 18
spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்