வவுனியாவில் நீரில் மூழ்கியவர் சடமாக மீட்பு!

Date:

வவுனியா பம்பைமடுப்பகுதியில்உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றயதினம் வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக 5 பேர் சென்றுள்ளனர்.

இதன்போது நபர் ஒருவர் நீர்தேக்கத்தில் இறங்கியநிலையில், நீரில் இழுத்துச்செல்லப்பட்டு மூழ்க்கியுள்ளார்.

இதனை அவதானித்த ஏனைய நபர்கள் அவரை நீருனுள் இறங்கிதேடியுள்ளனர். எனினும் அவரை மீட்கமுடியவில்லை.

நீருனுள் மூழ்கிய நபரை மாலை 2 மணியளவில் இருந்து 6மணிவரை கிராமத்து இளைஞர்கள் தேடியபோதும் அவரது நிலை தெரியாமல் கிராமமக்கள் திரும்பிச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கடற்படையின் சுழி ஓடிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நபரின் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியை சேர்ந்த ரவி (50) என்ற குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்