மண்மேடு இடிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி

Date:

பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

அணை கட்டும் பணிக்காக குழி வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலே இருந்த மண் குவியல் எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்ததில் குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (23) அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மண்ணுக்குள் சிக்கிய இளைஞனை மீட்டு பண்டாரவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் அதற்குள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்தவர் பண்டாரவளை, துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இந்த சம்பவம் குறித்து பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும்,...

பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து...

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்