பிசிஆர் சோதனையில் ஆசிரியைக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பிஎச்ஐக்கு பிணை!

Date:

பி.சி.ஆர் பரிசோதனையின் போது ஆசிரியை ஒருவரை  பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொது சுகாதார ஆய்வாளரை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதிவான் நலக ஜெயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

அனுராதபுரம் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளம் ஆசிரியையின் வீட்டிற்கு சென்று அவரிடம் பிசிஆர் சோதனை செய்ய முயன்ற சமயத்தில், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்ற குற்றச்சாட்டில் சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிசார் கோரினர்.

எனினும், சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குற்றச்சாட்டை மறுத்தார். சந்தேக நபர் கடமையில் இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த ஒரு குழுவினரால் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டு தாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

பிசிஆர் சோதனைக்காக ஆசிரியையின் வீட்டிற்கு சென்ற போது ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு, அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்