திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Date:

நடிகை திவ்யபாரதி உடன் டேட்டிங்கில் இருக்கிறார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் என தகவல்கள் பரவி வந்தன. இதற்கு ஜி.வி.பிரகாஷ் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

‘கிங்ஸ்டன்’ படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக அளித்த பேட்டியில் “நான் ஏதோ திவ்யபாரதி உடன் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அவரை படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே நான் சந்தித்தது உண்டு. படப்பிடிப்பு தளத்தினை தாண்டி வெளியே எங்கேயும் அவரை சந்தித்தது இல்லை. எனக்கு திவ்யபாரதி ஒரு நல்ல நண்பர் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக நடித்திருப்பது திவ்யபாரதிதான். ‘பேச்சிலர்’ படத்துக்குப் பின் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ளது. இந்தப் பேட்டியின்போது திவ்யபாரதியும் உடன் இருந்தார். இந்தப் பதிலின்போது “எனக்கும் பலர் மெசேஜ் அனுப்புவார்கள். உடனே இவருக்கு அனுப்புவேன். இவரோ விடுங்க பார்த்துக் கொள்ளலாம் என்பார். சில சமயங்களில் கஷ்டமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மார்ச் 7ஆம் திகதி வெளியாகவுள்ள படம் ‘கிங்ஸ்டன்’. கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், சேத்தன், இளங்கோ குமாரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

spot_imgspot_img

More like this
Related

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...

சதொசவில் 18 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றங்கள் காரணமாக உலகச் சந்தைகளில் விலை உயர்வு...

மோசடி யுவதி கைது!

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்