யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

Date:

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞன் ஒருவர் அதீத போதை பாவனை காரணமாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றைய தினம் (02) உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனை முடிவுகளின்படி, இந்த உயிரிழப்பு அதிக போதை பாவனையால் ஏற்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன், முன்னதாக சிறு குற்றச் செயல்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு, சில நாட்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் போதை பொருள்களை நுகர்ந்த நிலையில், அதீத போதை காரணமாக சுகவீனம் ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதை பாவனைக்கு உட்பட்ட மற்றவர்களை பற்றியும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்