கடந்த மாதம் 16ம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் இன்று (03) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விசேட அதிரடிப்படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.




