வெளிமாவட்ட பேருந்துகள் யாழ் வைத்தியசாலை வீதிக்குள் நுழைய தடை!

Date:

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது வெளி செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகள் நேராக புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் தரிப்பிடத்திற்கு செல்ல வேண்டும். புதிய பஸ் தரிப்பிடத்தை இலங்கை போக்குவரத்து சபையும் தனியார் பஸ் உரிமையாளர்களும் பயன்படுத்த மறுத்து வந்த நிலையில் யாழ் மாநகர சபையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம் முடிவானது யாழ்ப்பாணம் போக்குவரத்து போலீசாருக்கும் அறிவித்து இதனை மீறுபவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துகள் வைத்திய சாலை வீதியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டால் யாழ் நகரின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவடையும்.

எனவே அனைவரினதும் ஒத்துழைப்பை இது தொடர்பில் வேண்டி நிற்கின்றேன் என முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை...

குறுகிய இனவாத, மதவாத சிந்தனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி

குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகள் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு...

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்