அமைச்சரின் வாகனம் அடிபட்டது!

Date:

இன்று (20) காலை சிலாபம்- ஆனமடுவ வீதியில் பல்லம-செருகல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தோட்டத் தொழில் துறை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ கலந்து கொள்ளும் கிராம மக்களுடனான கலந்துரையாடலிற்காக கருவலகசெவ, நெலுமக பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது.

ஆனமடுவ- சிலாபம் வீதியில் செருகல வளைவுக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சொகுசு ஜீப் சாலையில் இருந்து விலகி மரத்தில் மோதியது.

விபத்துக்குப் பின்னர் இலேசான காயமடைந்த இராஜாங்க அமைச்சர் மற்றொரு வாகனத்தில் ஜனாதிபதியின் நிகழ்ச்சிக்குச் சென்றதாகவும், விபத்தில் காயமடைந்த மற்றவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித...

சுரேஷ் சாலேயின் மனைவியின் நாடகங்கள் தொடர்கின்றன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத்...

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்