26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

ஹெரோயினுடன் கைதான இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காலி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லபத பகுதியில் 5750 மில்லிகிராம் ஹெரோயினும், 11320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து, காலி பொலிஸார் அவர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையை முன்னெடுத்த நீதவான், இருவரையும் நாளை (31) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில், காலி பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இருவரையும் கைகளில் விலங்கிட்டு தனியார் முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றபோது, சந்தேக நபர்கள் புத்திக்கூர்மையுடன் செயலில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர், மற்றவரின் கைவிலங்குகளை கழற்றி, இருவரும் ஒன்றாக முச்சக்கர வண்டியில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்குப் பின்னர், குறித்த இருவரையும் தேடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

Leave a Comment