கனடா தூதர் பதவியை நிராகரித்தார் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா!

Date:

கனடாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார்.

கனடாவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகராக தப்புல டி லிவேராவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பரிந்துரைத்தார்.

இருப்பினும், அவர் அதனை நிராகரித்ததாக சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்தபடி மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்டமா அதிபரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.

தப்புல டி லிவேரா தனது பதவிக் காலத்தில் இதுவரை 27,206 கிரிமினல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளை முடித்துள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்கள ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் இரண்டு ஆண்டு கால பதவிக்காலப் பகுதியில் (2019 மே முதல் 2021 மே வரை) இது செய்யப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்