இஸ்ரேல் பிரதமருக்கு ட்ரம்பின் அழைப்பு

Date:

இந்திய பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய, நெதன்யாகு அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்திக்கவுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, அவரை சந்திக்க அழைப்பு பெறும் முதல் சர்வதேச தலைவர் நெதன்யாகுவாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் பெப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக இருவரும் தொலைபேசி உரையாடல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...

ஈரானுடன் இணக்கமாக செயற்படுகிறோம்!

ஈரானுடன் அமெரிக்கா மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாகவும், கத்தாரில் சமீபத்தில் நடந்த சந்திப்புகள்...

யாழ் பல்கலை பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்