26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

‘அர்ச்சுனாவை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்… அவருக்கு வாக்களித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்’: சைவ குருமார் கொந்தளிப்பு!

சைவ சமயத்தை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய தண்டனை வழங்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் இன்று (21) நடந்த ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனா அவர்கள் இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் கேவலமான வார்த்தைகளை முக நூலில் பதிவிட்டமையை கண்டித்து அவருக்கெதிராக இந்து சமய கலாச்சார அமைச்சு மற்றும் நாட்டின் ஜனாதிபதி ஆகியோர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் நியாயம் வேண்டி தாங்கள் வீதியில் இறங்கி போராடத் தயாராக இருக்கிறோம்.

அவர் பேசுகின்ற வார்த்தை சைவக் குருமார்கள் இந்துக் குருமார்கள் அனைவரையும் தாக்கக் கூடிய அளவிற்கு இந்த வார்த்தைகளை வெளியிட்டுள்ளார். இந்த புனிதமான திருநீற்றையும் அணிகின்ற சைவ மக்களையும் அந்தணர்களாக இருக்கட்டும் அல்லது  ஆலய தர்ம கர்த்தாவாக இருக்கலாம் இவர்கள் எல்லாம் எங்களது சமயத்திலே சமய தீட்சை பெற்றவர்களாவர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு அங்கங்களுக்கும் திருநீறை பூசுகின்ற வழக்கம் இருக்கின்றது.

இதிலும் குறிப்பாக அங்கு ஒருவன் இருப்பான் என்று சுட்டிக் காட்டி அவர் பேசுகின்ற வார்த்தை எங்களுடைய குருமார்களை தாக்கி அவர் பேசுகின்றார் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே இவ்வாறான கேலித்தனமான பூச்சாண்டித்தனமான வார்த்தைகளை பேசுபவருக்கு எதிராக இலங்கைச் சட்டத்தின்படி சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். இதுபோன்ற கேவலமான வார்த்தைகளை பேசுகின்ற இவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்கள் வெட்கப்பட வேண்டும் கவலைப்பட வேண்டும்.

ஆகவே அவர் இன்றோடு இதை உணர்ந்து இவ்வாறான வார்த்தைகளை பேசுவதை நிறுத்த வேண்டும். இதேபோன்று இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்த்தவம் என எந்த மதங்களையும் பற்றி எவரும் இழிவாக பேசுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இது சம்பந்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியோ. இந்து கலாச்சார அமைச்சோ அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படா விடின் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற இந்து குருமார்கள் சைவ அமைப்புக்கள் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கான தீர்வு வரும் வரையும் நாங்கள் போராடிக் கொண்டிருப்போம் என்பதை சகலருக்கும் அறியத் தருகின்றோம் என தெரிவித்தனர்.

-க.ருத்திரன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாதுகாப்பு முறையில் புரட்சி – சிறைகளுக்கு விசேட அணிகள்

east tamil

பொது வளங்களை மக்கள் நலனுக்காக மாற்றும் முயற்சி

east tamil

இந்த விடயத்தில் ரணில், கோட்டா சிறப்பு: அனுர பாராட்டு!

Pagetamil

இந்தியர் என நினைத்து பிடித்த யாழ் ஐயரை விடுவிக்க இலஞ்சம்: வசமாக சிக்கிய அதிகாரி!

Pagetamil

மாணவி கடத்தல் விவகாரம்: அசமந்தமாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!

Pagetamil

Leave a Comment