இந்தியர் என நினைத்து பிடித்த யாழ் ஐயரை விடுவிக்க இலஞ்சம்: வசமாக சிக்கிய அதிகாரி!

Date:

கைது செய்யப்பட்ட கைதியை விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்து ஐந்து இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்ட்ட, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு மையத்தில் கடமையாற்றிய குடிவரவு மற்றும் குடியகல்வு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியான கே.கே.டபிள்யூ.மஹிந்த ஹேமகுமாரவை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (21 ஆம் திகதி) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், முந்தைய நாள் (20 ஆம் திகதி) பிற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் நடத்திய சோதனையின் போது, ​​சந்தேக நபர் வெலிசறை தடுப்பு மையத்தில் கைது செய்யப்பட்டார்.

வெல்லவாய பொலிஸார் குறித்த கைதியை இந்திய பிரஜை எனக் கூறி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் தடுப்பு மையத்திற்கு அனுப்பிய போதிலும், அவர் உண்மையில் இந்திய பிரஜை அல்ல, யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் ஒரு சைவ மதகுரு என்ற தகவல் தெரியவந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்