வெல்லவாய பொலிஸ் பிரிவின் செல்லபாவ பிரதேசத்தில் அமைந்திருந்த கடை ஒன்றில் சட்டவிரோத மதுபான தொழிற்சாலை இயங்கியதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் சுற்றிவளைப்புச் செய்த பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த கடை, தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் போர்வையில் செயல்பட்டு வந்ததாகவும், அதனுள் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சோதனையின் போது, 57 சட்டவிரோத மதுபானப் போத்தல்கள், கோடா மற்றும் பீப்பாய் சுருள்கள், மதுபானம் காய்ச்சும் உபகரணங்கள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சமூக சீர்கேட்டை வெளிப்படுத்தும் குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர், வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.