பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

Date:

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு, இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்குக் கிடைக்கும் என கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.

பயிர் சேத மதிப்பீடுகள் தற்போது 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மன்னார் போன்ற பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கான மதிப்பீடு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், விவசாயிகள் இறுதி இழப்பீட்டு ஆவணங்களை வழங்கியவுடன், நிதி விரைவில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இடப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், விவசாயிகள் இழப்பீடு பெறுவதற்கான அனைத்துப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதாகவும், அந்தத் தொகையை விரைவில் வங்கி கணக்குகளுக்கு மாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...

போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்