க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
கலைப் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் பாலிநகர் மகா வித்தியாலய மாணவி சிவகுமாரன் மதுரா.

கணித பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஆறுமுகம் சுபவர்சனா.
உயிரியல் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் விசுவமடு மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் குமாரச்சந்திரன் சந்திரவதனன் வணிகப்பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்.

மல்லாவி மத்திய கல்லூரியில் வணிகப்பிரிவில் கல்வி பயின்ற மாணவி பத்மநாதன் சங்கவி 3A சித்திகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார்.




