24.7 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

சிறிதரன் எம்பிக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அநியாயம் – தமிழரசுக் கட்சியின் கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழரசுக் கட்சி கண்டனம் விடுத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார்.

நேற்று(12), இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் பயணிக்கச் சென்ற போது, விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார். விசாரணைகள் நிறைவு பெற்ற பின்னர் அவருக்கு பயண அனுமதி வழங்கப்பட்டது.

சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதுடன், ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டுள்ள இவரை இவ்வாறு நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சிவஞானம் சிறிதரன் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும், மூன்றாவது பெரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்படுகின்றார் எனவும் சி.வி.கே.சிவஞானம் அவர்கள் தெரிவித்து சிறிதரன் அவர்களுக்கு பயணத்தடை விதித்து விசாரணை செய்தமையை கண்டித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், விமான நிலையத்தில் அவரை தடுத்து வைத்து விசாரித்த சம்பவம் பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்ததாக எமக்குச் சந்தேகம் தோன்றுகிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது எனவும், அதிகாரங்களைப் பயன்படுத்தி, மக்களின் பிரதிநிதிகளை இதுபோன்ற வழிகளில் துன்புறுத்துவது ஜனநாயகப் பிரச்னையாகும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

Leave a Comment