கப்பம் கோரிய முன்னால் அமைச்சர்கள்

Date:

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நாட்டிற்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் இலங்கைக்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரப்பட்டதால் தாம் தமது முதலீடுகளை கைவிட்டதாக தென்கொரிய மற்றும் அவுஸ்திரேலிய தூதுவர்கள் , வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்தே, அந்த முதலீடுகளை இந்தியா மற்றும் வியட்நாமுக்கு கொண்டு சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த தென்கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன் ஆகியோரே இந்த முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

தென்கொரிய தூதுவர் மேலும் கூறுகையில், முத்துராஜவெலவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குழாய் மூலம் எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக அழைக்கப்பட்ட திறந்த டெண்டரை, தனது நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர் பெற்றனர், ஆனால் கப்பம் கொடுக்காத காரணத்தால், திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார்

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகரை பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஜஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது

ஏறாவூரில்   உணவக உரிமையாளர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை பழிவாங்க வேண்டி...

ஏறாவூர் தன்னமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை–

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்