24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட யுவதி ஓமானில் உயிர்மாய்த்தார்

ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் ஓமன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அறையில் அடைத்து வைக்கப்பட்டு, வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அம்பாந்தோட்டை பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்த இரண்டு யுவதிகளையும் ஓமன் நாட்டுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியொருவர் ஓமானில் கடந்த 24ஆம் திகதி தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலையீட்டின் பேரில் இந்த யுவதியுடன் அவரது 24 வயதுடைய மூத்த சகோதரியும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

துபாயில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி சமுர்த்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் தமது இரண்டு பிள்ளைகளையும் ஏமாற்றி இலங்கையிலிருந்து ஓமன் நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தூக்கில் தொங்கி உயிரிழந்த யுவதியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

பின்னர் குறித்த இரண்டு இளம்பெண்களும் இலங்கையில் உள்ள தமது பெற்றோரிடம் இதனைத் தெரிவித்து தம்மை இதிலிருந்து மீட்குமாறு கேட்டுள்ளனர். இதன்படி இரண்டு பிள்ளைகளின் பெற்றோர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்யச் சென்றிருந்த போதிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உரிய முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளதுடன் இரண்டு மகள்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வெளியுறவு அமைச்சிடம் புகார் அளித்துள்ளனர். இரண்டு இளம் பெண்களின் பெற்றோர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு செய்த முறைப்பாடு தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர்  அறிந்து கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் வீட்டுக்கு வந்து, வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்தது ஏன் என அச்சுறுத்தியதுடன், குறித்த யுவதிகள் இருவரும் ஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் பணிபுரிபவர் எனவும், அவர் மற்றுமொரு குழுவுடன் இணைந்து டுபாய், ஓமன், பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு மனிதக் கடத்தில் ஈடுபடுபவர் என்றும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருபத்தி நான்கு வயதுடைய மூத்த மகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment