கொழும்பு – பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளை – வியாரகல பகுதியில் பயணித்த வேன், இன்று (31)மாலை வீதியை விட்டு விலகி பாறையில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹொரணையில் இருந்து அனுராதபுரத்திற்கு சுற்றுலா சென்று திரும்பி கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஹொரணை, ரெட்டியால பிரதேசத்தை சேர்ந்த 86> 50 வயதுடையவர்கள்.
ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடையிலான வளைவிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



