தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, இந்த இறக்குமதிகள் கட்டமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.
வாகனத்துறையை நீண்ட காலத்திற்கு மூட முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, வாகன இறக்குமதியை மீண்டும் மூன்று கட்டங்களாக ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் இறக்குமதி செய்வது 2024 டிசம்பர் 14 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது, என்றார்.
2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள நிலையில், சரக்கு மற்றும் தனியார் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தினால் இலங்கைக்கு அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்படாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
“மத்திய வங்கியுடனான நீண்ட கலந்துரையாடல்களின் மூலம், வாகனங்களின் இறக்குமதி மற்றும் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் காரணமாக செலவிடப்படும் டொலர்களின் தொகையை அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த, வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.