காதர் மஸ்தானுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய மன்னார் வர்த்தகருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை!

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் காதர் மஸ்தானைப் பற்றி வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்தும் ஓடியோ கிளிப்களை பரப்பிய குற்றச்சாட்டில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட என். எம்.பரிஸ் என்ற வர்த்தகருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (26)  தீர்ப்பளித்தார்.

தண்டனையை ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கவும், சந்தேகநபருக்கு 5000 ரூபா அபராதமும் விதித்தும் பிரதம நீதவான் உத்தரவிட்டார். முறைப்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளையும் உடனடியாக நீக்குமாறும் பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஒன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பாக 2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ் காதர் காதர் மஸ்தான் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த பிரதான நீதவான் திலின கமகே, மன்னார் பகுதியைச் சேர்ந்த என். எம்.பரிஸ் என்ற தொழிலதிபருக்கே ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை பிறப்பிக்கப்பட்டது.

காதர் காதர் மஸ்தான் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி முகமது அலி சப்ரி ஆஜரானார்.

spot_imgspot_img

More like this
Related

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...

இனி இந்த 8 விடயங்களை செய்ய TIN இலக்கம் அவசியம்!

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, 2026 நவம்பர் 1-ஆம் திகதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்