மின்சாரசபை இழுத்தடிப்பு: இந்த வருடம் மின் கட்டணம் குறையாது?

Date:

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான திட்டங்களை முன்வைக்க இலங்கை மின்சார சபை காலதாமதம் செய்வதால் இவ்வருடம் மின் கட்டணத்தைக் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக முன்மொழிவுகளை சமர்ப்பிக்க இரண்டு வாரங்கள் கால அவகாசம் கேட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முன்மொழிவுகளை ஆய்வு செய்து மின் கட்டணத்தை திருத்த ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கை மின்சார சபை மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த போதிலும், மின் கட்டணக் குறைப்பு போதாது, எனவே மீண்டும் முன்மொழிவுகளை திருத்தம் செய்து சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பான முன்மொழிவுகளை இம்மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்த போதிலும், அன்றைய தினம் குறித்த பிரேரணையை சமர்ப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டதால், இம்மாதம் 22ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு அதன் பின்னர், மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு மின்சாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு டிசம்பர் 6 ஆம் திகதி முன்மொழிவுகள் கிடைக்கப்பெறும் என்றும், அன்றைய தினம் மின்சாரசபை முன்மொழிவுகளை சமர்ப்பித்தாலும், மின் கட்டணக் குறைப்பு அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்படும் என்றும் ஆணைக்குழு நம்புவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

மன்னாரில் இராணுவ ஜீப் விபத்து: ஒருவர் பலி

தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் வேகமாக வந்த இராணுவம் பயணித்த வாகனம்...

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய...

காட்டு யானைகள் அட்டகாசம்- நயினாகாட்டில் ஒருவர் உயிரிழப்பு- சதோச களஞ்சியம் சேதம்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மாவடிப்பள்ளி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்