இலியானா தற்கொலை முயற்சி?

Date:

தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இலியானாவும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் கிசுகிசுத்தனர்.

ஆனால் சமீபத்தில் இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதற்கு இலியானா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என்று வெளியான தகவல்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் தற்கொலைக்கு முயன்று பிறகு உயிர்பிழைத்ததாக எனது வேலைக்காரி சொன்னார் என்றும் தகவல் வெளியானது. எனக்கு வேலைக்காரியே இல்லை. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை. இப்போது உயிருடன்தான் இருக்கிறேன்” என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்