பிரபாகரன் படத்தை மஹிந்தவிற்கு ரக் செய்தால் அவரை கைது செய்வீர்களா?: வீரசேகரவிடம் இன்று கேட்பார் சாணக்கியன்!

Date:

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகனை, நேற்று (3) ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்-

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் அவர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஏறாவூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரை பார்வையிட நான் இங்கு பொலிஸ் நிலையம் வந்தேன். போலியான முகநூலில் ஊடக மோகனுடைய பெயரை “ரக் ” செய்து பதிவிட்ட காரணத்தினால் அவரை கைது செய்து விசாரணை செய்வதாக கூறப்பட்டுள்ளது.

முகநூலில் ஒருவருக்கு ரக் பண்ணுவதற்க்காக கைது செய்யப்படுவது என்பது முகவும் கேவலமான விடயம். இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடைபெறுகிறது. நாட்டில் குண்டு வெடிப்பிக்கு காரணமாய் இருந்த சாரா என்ற பெண்மணியை கூட இது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் இந்த பொலிஸ், முகநூலில் ஒருவர் ரக் செய்தார் என்று கூறி ஒருவரை கைது செய்து விசாரணை செய்வது என்பது மிகவும் கீழ்தரமான விடயம். இது இந்த அரசின் இயலாமையை மறைக்க செய்யப்படும் வேலைத்திட்டம்.

நான் நாளைய தினம் தலைவர் பிரபாகரனின் படத்தை முகநூலில் பிரசுரித்து பிரதமருக்கு ரக் செய்தால் நீங்கள் பிரதமரை கைது செய்வீர்களா? இங்கு கைது செய்யப்போட்டுள்ள மோகனின் குற்றச்சாட்டு விடுதலை புலிகள் தொடர்பானவையை ரக் செய்ததாக.

நாளைய தினம் நான் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரக் செய்தால் அவர்களை கைது செய்வீர்களா?

இது தமிழ் மக்களை அடக்கும் ஒரு செயத்திட்டமாகத்தான் நான் பார்க்கிறேன்.
அரசியல் ரீதிகாக தமிழ் பேசும் மக்களை அடக்கும் வேலைத்திட்டமாக நான் இதை பார்க்கிறேன். இந்த அரசு இவரான வேலைத்திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும்.

கோரோனாவால் மக்கள் பாதிப்படைந்து இருக்கும் போது மக்களுக்கு சிகிச்சைக்கு ஒரு ICU bed எடுக்க வசதி இல்லாத அறிவில்லாத இந்த அரசாங்கம் இவ்வாறாக தமிழர்களை அடக்க முயற்சி எடுக்க கூடாது என்பதை தெரிவிக்கிறேன். இதை மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

நாளைய தினம் (இன்று) நான் இது தொடர்பாக பொலிசுக்குரிய அமைச்சர் சரத் வீரசேகர அவர்களை சந்திக்கஉள்ளேன்.

உடனடியாக மோகன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்ந்தால் இந்த அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் நாம் செய்யவேண்டி வரும். வட கிழக்கு மலையகத்தில் தமிழ் இளைஞர்ககளை கைது செய்கின்றனர். அண்மையில் மாவீரர் தினத்தில் கைது செய்த இளைஞர்களை எந்த வித விசாரணை இல்லாமல் சிறையில் வைத்துள்ளனர் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்